ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி நேற்று இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
வியட்நாமிற்கான விஜயத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 7.10 மணியளவில் ஈரானின் விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த குழு 20 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்க உள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற தொடர்புகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்வது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.