சுவிட்சர்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சுவிஸ் நெடுவீதியில், 40 பேருடன் பயணித்த குறித்த பேருந்து, சூரிச் வின்டெர்துர்-வுலபின்கென் பகுதியில் இரண்டு பாரவூர்திகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர காவற்துறையினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றது.  எனினும், சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும், விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.