விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த கழக உறுப்பினர் சின்னத்தம்பி தியாகராசா (பவன்) என்பவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கோரிக்கைக்கிணங்க,

கோழி வளர்ப்பினை மேற்கொள்வதற்காக ரூபா 26,000/=யினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் சுவிஸ் தோழர்கள் சங்கர் மற்றும் தீபன் ஆகியோர் கடந்த 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழு உறுப்பினர்களான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), வவுணதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை(கேசவன்), என்.ராகவன், கமலநாதன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் க.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு திருமதி தியாகராசா சாந்தியிடம் வாழ்வாதார நிதியுதவியினை கையளித்திருந்தனர்.