Header image alt text

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு தடவைகள் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. Read more

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தொழிற்சாலையை செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

பயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஆட்டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இப்புதிய சட்டத்துக்கு, ஆட்டோ சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான வசதிகளுடனான மீற்றர் கருவிகள் சந்தையில் விற்பனைக்கு இல்லையெனவும், அச் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது.

53 நாடுகளின் அரவ தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதில் பங்கேற்றுள்ளார். “பொதுவான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. Read more

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றையதினம் (19) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றிருந்தது. நேற்றும் இன்றும் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐந்து பேர் உயிரிழந்து பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர், ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதி வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் மாலை வீட்டு உரிமையாளர் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது,

தண்ணீர்த் தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருந்ததையடுத்து பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, பலாலி இராணுவத்தினர் கண்ணிவெடிகள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர். இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதி அண்மையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வேனும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வேன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வேனில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Read more