பயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஆட்டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இப்புதிய சட்டத்துக்கு, ஆட்டோ சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான வசதிகளுடனான மீற்றர் கருவிகள் சந்தையில் விற்பனைக்கு இல்லையெனவும், அச் சங்கம் தெரிவித்துள்ளது. பற்றுச்சீட்டுகளை வழங்காத ஆட்டோக்கள் தொடர்பில், பொதுமக்கள் 011 -2696890 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. ஆட்டோ சாரதிகள் தமக்கு ஏற்றாற்போல் கட்டணங்களை அறவிடுவதனால், பயணிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணும் வகையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.