பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது.
53 நாடுகளின் அரவ தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதில் பங்கேற்றுள்ளார். “பொதுவான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக இடம்பெற்ற மோல்டா அரசு தற்போது பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வருவதுடன், இம்முறை மாநாட்டின் போது அமைப்பின் தலைமைத்துவம் ஐக்கிய இராச்சியத்திடம் கையளிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.