ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தொழிற்சாலையை செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில், கைது செய்யப்பட்ட குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.