Header image alt text

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அடுத்தக்கட்ட மறுசீரமைப்பு மற்றும் இந்த ஆண்டுக்குள் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பில் இலங்கையுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 6 மாதங்களுக்காக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தில் அடுத்தக்கட்ட மதிப்பீடுகளுக்கு முன்னர் இலங்கை நடைமுறைப்படுத்தும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more

துறைமுக நகர திட்டம் ;காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் பீ.என்.பீ. உதயகாந்த தெரிவித்தார். இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில மாற்றங்களும் உள்ளது. Read more

புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்பின் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகின்றது. Read more

பண்டாரவளை லியன்கஹவெலக்கு சொந்தமான பலகல தோட்டத்தில், இன்று ஏற்பட்ட நிலம் தாழிறக்கம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.எம். உதயகுமார தெரிவித்தார்.

மேலும், இந்நிலம் தாழிறக்கம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அப்பகுதியில், மழையுடனான காலநிலை நிலவாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து ஆராயவென தேசிய கட்டட ஆராய்ச்சி அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2018 உலக இறப்பர் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இறப்பர் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச இறப்பர் ஆராய்ச்சி குழுவின் 25 உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பு விடுத்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளினார்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் தடையை மீறி அவர் தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தார். தற்போது அவர் சில மாத காலங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு சுமுகமான முடிவுகளை எடுத்து வருகிறார். Read more

அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார். விருப்பு வாக்கு முறைத் தேர்தலுக்கு அதிகமானோர் விருப்பமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய தேர்தல் முறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. நேற்றுமாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என இதுவரை அறியப்படவில்லை. எனினும் தீப்பரவலின்போது பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது. Read more

பரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழு, அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இக் குழுவினர், நாளை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.