துறைமுக நகர திட்டம் ;காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் பீ.என்.பீ. உதயகாந்த தெரிவித்தார். இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில மாற்றங்களும் உள்ளது. குறித்த மாற்றங்களுடன் முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் வரைப்படத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிட உள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் கூறியுள்ளார்.