புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்பின் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகின்றது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.