வடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பு விடுத்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளினார்.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் தடையை மீறி அவர் தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தார். தற்போது அவர் சில மாத காலங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு சுமுகமான முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தனது நாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பார்க்க விருப்பம் தெரிவித்தது என பல சுமுகமான முடிவுகளை எடுத்துள்ளார்.
இந் நிலையில் கிம் ஜாங் உன் வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.