முல்லைத்தீவு கேப்பாபுலவு வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. நேற்றுமாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என இதுவரை அறியப்படவில்லை. எனினும் தீப்பரவலின்போது பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது.தீப்பரல் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.