பண்டாரவளை லியன்கஹவெலக்கு சொந்தமான பலகல தோட்டத்தில், இன்று ஏற்பட்ட நிலம் தாழிறக்கம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.எம். உதயகுமார தெரிவித்தார்.

மேலும், இந்நிலம் தாழிறக்கம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அப்பகுதியில், மழையுடனான காலநிலை நிலவாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து ஆராயவென தேசிய கட்டட ஆராய்ச்சி அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.