Header image alt text

யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பொலிஸார் பயன்படுத்துவதனால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காங்கேசன்துறை, 2016 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பகுதியளவில் விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டங்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், பொலிஸார் சில வீடுகளைப் பயன்படுத்துவதால் அங்கு மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read more

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தவேண்டு என தெரிவித்துள்ளார்.