ஐவர் உயிரிழந்ததோடு, பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் சிரேஷ்ட ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை பொலிஸாரால் நேற்றைய தினம், திக்கெனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட 42 வயது சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு, ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹொரணை பொலிஸாரால் நேற்றைய தினம், திக்கெனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்ட 42வயது சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு, ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தர பிறப்பித்தது.

இதேவேளை, அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடந்த 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.