பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை இலங்கையை வந்தடைந்தார்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மருத்துவர், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது பாரியார், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.