Header image alt text

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 8ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின்போது இலங்கையில் SACOSAN (தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டு அலுவலகம்) அமைப்புக்குக்கான நிரந்தர அலுவலகம் கண்டியில் அமைக்கப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற 7ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின் இறுதிநாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். Read more

இலங்கையில் ஓட்டோ வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்காக புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கு அமைய, பயணிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தும் சாரதிகளின் வயதெல்லை 35 இற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கபடவுள்ளது.

இந்த சட்ட திட்டத்தினை மீறும் ஓட்டோ சாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார். Read more

வவுனியாவில் உள்ள பம்பைமடு இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிப் பள்ளியில் 50க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியின் போது, உடல் நிலை பாதிப்பிற்கு உள்ளான நிலையில் 19 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். Read more