வவு­னியா வளா­கத்தில் சிங்கள மாண­வர்­களால் புத்தர் சிலை வைக்க முற்­பட்­ட­தை­ய­டுத்து யாழ். பல்­க­லைக்­க­ழக வவு­னியா வளாகம் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.

பம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வவு­னியா வளா­கத்தில் நான்கு மாதங்­க­ளுக்­கு­மான வழி­பாட்டு தலம் அமைப்­ப­தற்­கான திட்டம் உள்­ள­போ­திலும் தற்­போது அவ் வளாகம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­வ­தனால் இது­வரை எந்த மத தலங்­களும் வைக்­கப்­ப­ட­வில்லை. இந் நிலையில் சிங்­கள மாண­வர்கள் வளா­கத்­தினுள் விகா­ரை­யொன்­றினை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­துடன் அதற்­கான பொருட்­க­ளையும் கொண்டு வந்­துள்­ளனர். இதனால் மாண­வர்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் தோன்­றலாம் என்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வளாக நிர்­வாகம் அதனை தடுத்­த­துடன் கொண்டு வரப்­பட்ட பொருட்­க­ளையும் தமது கட்­டுப்­பாட்­டினுள் எடுத்­துச்­சென்­றுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து குறித்த மாண­வர்கள் நிர்­வா­கத்­தி­ன­ருடன் முரண்­பா­டான நிலையை உரு­வாக்­கி­யி­ருந்­த­மை­யினால் வவு­னியா வளா­கத்­தினை மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் விடு­தி­களில் உள்ள மாண­வர்கள் அனை­வரும் இன்று மாலை 6 மணிக்கு முதலும் பெண் மாண­வர்கள் நாளை காலையும் வெளி­யேற வேண்டும் என முதல்­வரால் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் வளா­கமும் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதிக்கு சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.