தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய, சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்க, கட்சி தீர்மானித்துள்ளதாக, சு.கவின் உப செயலாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நேற்று இரவு இடம்பெற்ற, சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்படி 16 பேரும், கட்சியை விட்டு விலகுவது தொடர்பில், ஒரு வார்த்தையேனும் பேசவில்லையென்றும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, அமைச்சர் குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சிக்குள், 23பேர் தொடர்ந்திருப்பதாக கூறிய அமைச்சர், அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற 16 பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.