கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால் சிசுவின் சடலத்தினை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். 

இதேவேளை உயிரிழந்த சிசுவின் சடலத்தினை பொறுப்பேற்க பெற்றோர், உறவினர்கள் யாராவது முன்வரும் பட்சத்தில் அவர்களிடம் சடலத்தினை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.