தமிழகத்தில் தற்போது 95 ஆயிரம் ஈழ ஏதிலிகள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மீள்க்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் தகவல்களில் இந்த விடயத்தை அறியக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 193 ஈழ ஏதிலிகள் தங்கியுள்ளனர்.

110 ஏதிலிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 916 குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 436 ஏதிலிகளும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் 34 ஆயிரத்து 757 ஏதிலிகளும் வசிக்கின்றனர். அவர்களுள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 6 ஆயிரத்து 900 ஈழ ஏதிலிகள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இல் ஆயிரத்து 728 பேரும், 2012 இல் ஆயிரத்து 291 பேரும், 2013இல் 718 பேரும்,

2014இல் 338 பேரும், 2015இல் 453 பேரும், 2016இல் 852 பேரும், 2017இல் ஆயிரத்து 520 பேரும் இலங்கை திரும்பியுள்ளனர் சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மீள்க்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.