கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.