யாழ்ப்பாணத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு மற்றும் மீள்க்குடியேற்றம் தொடர்பில் கருத்துக் கூறுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை விடுவிப்பது குறித்து முப்படைத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், புது வருடத்திற்கு முன்னர், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணிகளில் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கை சவாலானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மீள்க்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் தற்போது 150 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.