Header image alt text

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க கனடா முன்வைத்துள்ளது.

இலங்கை வந்துள்ள கனடாவின் தென்னாசிய மற்றும் பூகோள விவகார பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மென் மற்றும் இலங்கைக்கான கனடாவின் தூதுவர் டேவிட் மெக்கினன் உள்ளிட்டவர்கள், நேற்றையதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்திருந்தனர். Read more

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படை வீரரான லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவர் எவன்கார்ட் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றியுள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

பல்கலைக்கழக பிக்கு மாணவர் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read more

அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு சொந்தமான (USNS Merc) யு.எஸ்.என்.எஸ் மர்சி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

குறித்த கப்பலில் கடற்படை பிரதானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ முகாம்களுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்றுகாலை 8.00 மணிமுதல் நாளை காலை 8.00 மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றினையும் அந்த சங்கம் வெளியிட்டுள்ளது. Read more

சிறீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சமிந்த குமார சுதுசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இருவரும் ஜனாதிபதியிடமிருந்து தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.