எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படை வீரரான லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவர் எவன்கார்ட் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றியுள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவிருந்தார்.