கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றுகாலை 8.00 மணிமுதல் நாளை காலை 8.00 மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றினையும் அந்த சங்கம் வெளியிட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட சில கோரிக்கைகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அதனை செயற்படுத்த கிழக்கு மாகாண ஆளுநர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் அவை இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.