சிறீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சமிந்த குமார சுதுசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இருவரும் ஜனாதிபதியிடமிருந்து தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.