அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு சொந்தமான (USNS Merc) யு.எஸ்.என்.எஸ் மர்சி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

குறித்த கப்பலில் கடற்படை பிரதானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ முகாம்களுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.