இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க கனடா முன்வைத்துள்ளது.

இலங்கை வந்துள்ள கனடாவின் தென்னாசிய மற்றும் பூகோள விவகார பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மென் மற்றும் இலங்கைக்கான கனடாவின் தூதுவர் டேவிட் மெக்கினன் உள்ளிட்டவர்கள், நேற்றையதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள் இந்த விடயத்தைக் கூறியுள்ளனர். மறுசீரமைப்பு செயற்பாடுகளின் கனடாவின் பங்களிப்பை விரிவாக்குவது போன்ற விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.