யாழ். சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more