அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பாம்பீச் பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

கடல்மார்க்கமாக சிறிய படகு மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் 11வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.