சைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி, வைத்தியக் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமீர சேனாரத்ன உயிர்தப்பியிருந்தார். எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சமீர சேனாரத்னவினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் எனவும், தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளதாகவும் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

எவ்வாறெனினும் கடந்த வருடம் ஏப்ரல் 18ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், கடுவளை நகர சபையின் தலைவர் லக்மால் குஷாந்த கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.