கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில்,“உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதியே கொண்டாடப்படுகின்றது ஆனால் இம்முறை மே 7ஆம் திகதி கொண்டாடும்படி அரசு அறிவித்துள்ளது

மே முதலாம் திகதி பொது விடுமுறையை அரசு ரத்து செய்துள்ளது. இச்செயளை எமது சங்கம் வண்மையாக கண்டிப்பதோடு அன்றைய தினம் பொது விடுமுறையை வழங்கும் படி அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் முதல் முறையாக எமது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் “செம்மே” தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

; அநீதியான இடமாற்றம்
; முறையான பதவி உயர்வு இன்மை
; சம்பள முரண்பாடு. நிலுவை சம்பளம் வழங்கப்படாமை
; எமது சம்பளத்தை எமக்கு தெரியாமல் திருடுதல்
; ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை தலையில் சுமத்துதல்
; மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் தரத்திற்கு இணைக்காமை
; இலவச கல்வியை இல்லாமல் செய்வதற்கான செயல்கள்
; மாணவர்களுக்கு சிறந்த கல்வி கூடங்கள் இன்மை

போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வடமாகாண அனைத்து ஆசிரியர்களையும் “செம்மே” தின நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறும், மே 7ம் திகதி கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெறும் செம் மேதின கூட்டத்திற்கு நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.” என அழைப்பு விடுத்துள்ளார்.