Header image alt text

இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஏற்பாடு செய்திருந்தன. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல இடங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். Read more

புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 8 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் பயணித்த சொகுசு சிற்றூந்து ஒன்றையும் காவற்துறை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம், கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது. Read more

நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 8276 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். Read more

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பின்னதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்துகொள்வதாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

விசேட தேவையுடைய இராணுவத்தினர் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். 3 நாட்களுக்குள் தங்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயந்து தீர்வு பெற்றுத்தருவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்ததாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. Read more

மே முதலாம் தினத்தன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச தொழிலாளர் தினத்தன்று காலை நியமிக்கப்படும் புதிய அமைச்சரவையின் மூலம் மகா சங்கத்தினரினால் முன்வைக்கப்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் பல வருட காலமாக நிலவி வந்த முறுகல் நிலை மற்றும் அதிகாரப்போக்கை முடிவிற்குக் கொண்டு வந்த கிம் ஜாங் உன், 1953 ஆம் ஆண்டின் பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த முதலாவது வட கொரிய அரச தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற கொரிய தலைவர்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் தசாப்தகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் பல்வேறு சாதகத்தன்மைகளின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது. Read more