புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 8 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் பயணித்த சொகுசு சிற்றூந்து ஒன்றையும் காவற்துறை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம், கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் கருவிகள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானது என காவற்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.