ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்துகொள்வதாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

விசேட தேவையுடைய இராணுவத்தினர் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். 3 நாட்களுக்குள் தங்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயந்து தீர்வு பெற்றுத்தருவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்ததாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம், விசேட தேவையுடைய இராணுவத்தினர் சிலரின் பெயரை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி அதன் மூலம் நிதி பெற்றுக்கொள்வதாக தெரிவித்து அவர்கள் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.