காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அடுத்து காணாமல் போனோரை தேடி அறியும் பிரிவும் நியமிக்கப்படும்.

அதேநேரம் காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி மன்னர் மாவட்ட செயலகத்தில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி முதலாவது மாவட்ட அமர்வு ஆரம்பிக்கிறது.

இதன்போது, காணாமல் போனோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் கூறியுள்ளார்.