ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதும் இந்த நபர் கத்தரி கோலுடன் மண்டபத்திற்கு நுழைய முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து பிங்கிரிய வரை வந்தமைக்கான காரணத்தை சந்தேக நபர் பொலிஸாரிடம் இதுவரை வெளியிடவில்லை.