மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்துவரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பிரதான வீதிகளில் வெள்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளது. இதன்படி நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் நிரப்பியுள்ளதால் பிரதான வீதியின் போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவலபிட்டிய நகரில் மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.