இன்றைய தினம் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் இடம்பெற்ற “சர்வதேச இலங்கையர் டயஸ் போரா” (INSD) கூட்டத்தில் இலங்கையின் அரசியல், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயற்பட வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது .

இவ் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த புலம் பெயர் தமிழர்களுடன் பெரும்பான்மையின செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கு கொண்டனர். இவர்களுடன் ஜேர்மனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டனர்.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை பொறுப்பாளர் தோழர் பவானந்தன் தலைமையில் கழக தோழர்களும், புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் தோழர் செல்லத்துரை ஜெகநாதனும் பங்கு கொண்டிருந்தனர்.
அரசியல் தீர்வு, அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை என்பன விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் ஜெகநாதன்,

மேற்படி விடயங்களிலும் சர்வதேச இலங்கையர் டயஸ் போரா மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எமது ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்தார்.