இலங்கை இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷஹிட் காகான் அப்பாசிக்கும் இடையே அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விரிவாக பல விடங்கள் கு

றித்து ஆராயப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இலங்கை இராணுவத்தை மேம்படுத்துவது குறித்தும் உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கையில் இராணுவத்தினரின் பங்கு குறித்து இராணுவத்தளபதி விளக்கமளித்துள்ளார்.