யுத்த காலத்தில், பலாலி விமானப்படை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் காணிகளில், 3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றன என, பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23,533 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்களுக்குச் சொந்தமான 683 ஏக்கர் காணி, புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.