ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம், முட்டாள்தனமான இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, 29 பேர் உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.