கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்றையதினம் கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது.

2010ம் ஆண்டு எம்.வீ.சன்சீ கப்பல் ஊடக ஏதிலியாக கனடா சென்ற அவர், கடந்த ஆண்டு கனடாவின் தொடர் கொலையாளியான மெக் ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் ஏதிலி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு, அவரது தொழில் அனுமதியும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலுக்கு உட்படாதிருக்கும் நோக்கில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக ஏதிலிகளும் கலந்து கொண்டிருந்தனர். அவருடன் மற்றுமொரு இலங்கையரும் மெக்ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.