தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே, கழகத் தோழர்களே, ஆதரவாளர்களே, தோழமைக் கட்சி உறுப்பினர்களே…

சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் “மேதின ஊர்வலத்தில்” கலந்து கொண்டு ஜனநாயக போராட்டத்துக்கு வலுசேர்ப்போம். சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்ப்போமாக.

சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, Helvetiaplatz இல் ஆரம்பித்து, Bürkliplatz இல் முடிவடையும்..
தொடர்புக்கு… 078.6461681, 078.9167111, 079.7333539, 079.9401982, 079.9297719, 076.5838410, 076.4454112, 077.9485214

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை