நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்றபோதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டமே அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு 68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், வட மாகாணத்தில் மொத்தமாக 72ஆயிரத்து 486 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 51 ஆயிரத்து 449 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 112 பேரும், மன்னாரில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 163 பேரும், முல்லைத்தீவில் 16 ஆயிரத்து 934 பேரும், வவுனியாவில் 17 ஆயிரத்து 926 பேரும், யாழ்ப்பாணத்தில் 79 ஆயிரத்து 314 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.