Header image alt text

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. Read more

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்றபோதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டமே அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு 68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.

அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்து ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் 3 ஆயிரத்து 148 பாடசாலைகள், 10ற்கும் குறைவான ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் 2017ம் ஆண்டறிக்கையில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் போதாமையை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more

மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்துவரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பிரதான வீதிகளில் வெள்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளது. இதன்படி நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Read more

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, பழைமை வாய்ந்த புத்தர் சிலைகளும் வேறு சில பழைமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும், பொருட்களும் பொலன்னறுவை காலத்துக்குரியவை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டுவரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், Read more

இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின்கீழ் சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எனினும், இவர்களுள் 23 பேர் ஏனைய குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுதலை செய்யப்படுகின்ற ஏனைய 405 பேரில் 4 பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.