மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­னது மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்கி உள்­ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ் அமைப்­புக்கள் குறிப்­பிட்­டன. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பி­டு­கையில், மூன்று மாகாண சபை­க­ளுக்­கான கால எல்லை நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அவற்­றுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைகள் இது வரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­ப­ட­வில்லை. குறித்த ஒரு­மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை வெளி­யி­டப்­பட்டால் மாத்­தி­ரமே குறிப்­பிட்ட காலத்தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த முடியும்.

ஆனால், எல்­லை­நிர்­ணய அறிக்கை இது வரையில் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் மாகா­ண­சபை தேர்­தலை செப்­டெம்பர் மாதத்தில் நடத்த முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் பிர­த­மரால் எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென தனி­யான குழு­வொன்று நிய­மிக்க முடியும்.

அந்த குழு­வி­னூ­டாக எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கை­களை விரை­வுப்­ப­டுத்தும் பணி­களை மேற்­கொள்ள முடியும். அவ்­வா­றா­ன­வொரு குழுவும் இது­வ­ரையில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. மாகாண சபை­தேர்தல் முறை­மை­தொ­டர்பில் பல­வா­றான விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்­கையும் தேர்­தலை ஒத்­தி­வைக்க கூடிய சூழ்­நி­லையை தோற்­று­வித்­துள்­ளது.

மேலும் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எல்லை நிரண்ய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென பெப்ரல் அமைப்பு குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போது நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறை­மை­யி­லா­வது மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லினை விரைவில் நடத்­த­வேண்டும் என்றார்.

இது குறித்து கெபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் குறிப்­பி­டு­கையில், மாகா­ண­சபை தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்­கா­கவே எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளியிடும் பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

எல்லை நிர்ணய அறிக்கை ளிவெயிடப்படாமல் தேர்தலை நடத்த முடியாது. குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேணடுமானால் எல்லை நிர்ணய அறிக்கையும் விரைவில் வெளியிடப்படவேண்டும் என்றார்.