காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம் இன்றாகும். சர்வதேச மே தினம் கொண்டாடப்படும் இன்று போல் ஓர் தினத்திலேயே அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார்.

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க இரண்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாச, 1993 ஆம் ஆண்டு மே தின பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி ரணசிங்க பிரேமதாச பிறந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் நுழைந்தார். அமைச்சராகவும், சபாநாயகராகவும், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இலங்கை அரசியலில் ரணசிஙக பிரமதோச செயற்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 அம் திகதி இலங்கையின் இரண்டாவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.