சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார

மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.